Tuesday, June 29, 2010

கல்யாண கலாட்டா!!

ரொம்ப நாள் கழித்து ஒரு நிச்சயதார்த்தம் போகும் வாய்ப்பு கிடைத்தது. என் இரண்டாவது ஒன்று விட்ட தம்பி (செகண்ட் கசின்!!). உள்ளே போகும் போதே சேகர் பார்த்து "உடனே போய் டிபன் சாப்பிடு. ரொம்ப நன்னா இருக்கு..போண்டா பிரமாதம் " என்றான். எனக்கு நப்பாசை. ஆனால் மணி சாயங்காலம் ஏழரை ஆகி விட்டது. " எட்டு மணிக்கெல்லாம் சாப்பாடு போட்டுடுவா" என்று மங்களா சொன்னதும் இன்னும் நப்பாசை அதிகமாகி விட்டது. " இல்ல.. இப்போ டிபன் சாப்டுட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பாடு சாப்பிடறேன்" என்று ஜகா வாங்கி கொண்டேன். விஜி என்னிடம் "ஒரு அரை மணி வெயிட் பண்ண முடியாதா" என்றாள். எனக்கு ரொம்ப பசி என்று பொய் சொல்லி dining ஹாலுக்கு ஓடினேன். பின்னாடியே மீராவும் ஹர்ஷும் "அப்பா.. எனக்கும் பசிக்கிறது"! விஜியை பார்த்து நீயும் வாயேன் என்றதும் அவளுக்கும் சபலம் தட்டி குடும்பமாக dining ஹாலுக்கு போனோம்.

டிபன் ரொம்ப பிரமாதம். போண்டா, ஊத்தப்பம், ஸ்வீட், சேவை...ஆஹா! வயிறு நிரம்பும் வரை இரண்டு மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிட்டேன். அதற்கு பிறகு தான் கஷ்ட காலம் ஆரம்பித்தது. எட்டு மணிக்கெல்லாம் முதல் பந்தி போட ஆரம்பித்து விட்டார்கள். Padhu பெரியப்பா விடாமல் நீங்க போய் சாபிடுங்கோளேன் என்றார். "இல்ல.. இப்ப தான் டிபன் சாப்டேன்" என்று வழிந்தேன். டிபன் ஆறு மணிக்கு சாப்பிட்டு இருப்பேள்...மணி எட்டாயிடுத்தே..பாவம் குழந்தைகளுக்கெல்லாம் பசிக்க போறது". விஜி என்னை விரோதமாக பார்த்தாள். "அடுத்த பந்தில சாப்பிடறோம்" என்று சமாளித்தேன். சரியாக பதினைந்து நிமிடத்தில் padhu பெரியப்பா "ரெண்டாவது பந்தி போடறா...வாங்கோ, வாங்கோ" என்று கையை பிடிக்காத குறையாக கூப்பிட்டார். விஜி என்னை முறைக்க நான் கண்டுக்காமல்"இல்ல...வந்து" என்று மழுப்ப முயற்சிதேன். "வாங்கோ..பாயசமும் சாக்லேட் கேக்கும் excellent ஆ இருக்கு", என்றார்.

அடுத்த நாள் வயிற்று வலியில் அவதிப்பட்டது தனிக்கதை!

No comments:

Post a Comment